For Daily Alerts
மு.க. முத்து வீட்டில் தீ விபத்து
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் வீ"ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அவருடையகுடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதன்கிழமை இரவு இங்கு திடீரென்று தீப்பிடித்தது. மளமளவென்று இந்த தீ வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள்மூலம், போராடி தீயை அணைத்தனர் தீயணைப்பு வீரர்கள்.
மின் கசிவு காரணமாகத்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!