சோடியம் விளக்கும்... மண்ணெண்ணெய் விளக்கும்
சென்னை:
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி காலத்தில் சோடியம் வேப்பர் விளக்குகளைபொருத்தியதன் மூலம் மட்டும் அரசுக்கு ரூ 21.26 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாகவும்,இது தவிர்த்திருக்க வேண்டிய அனாவசிய செலவு என்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று(வெள்ளிகிழமை) சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
சாதாரண டியூப் லைட்களை பொருத்துவதற்கு பதிலாக சோடியம் வேப்பர்விளக்குகளை பொருத்தியதன் மூலம் ரூ 21.26 கோடி செலவை தி.மு.க அரசுஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் கோ.சி.மணி தான்.சோடியம் வேப்பர் விளக்குகளை பொருத்தியதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ 7.36கோடி செலவு ஏற்பட்டுள்ளது.
சோடியம் வேப்பர் விளக்குகளை பயன்படுத்திய பஞ்சாயத்துகள் மின்வாரியத்திற்கு ரூ13.90 கோடி பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
கோ.சி.மணி தன் கருத்தைக்கூற முயன்ற போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவரைபேசவிடவில்லை.
கோ.சி.மணிக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்தபோது அவர் பேசியதாவது:
நான் ஊழல் புரிந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் என் மீது எடுக்கப்படும் எந்தநடவடிக்கையையும் நான் சந்திக்க தயராக இருக்கும் போது இது போன்றகுற்றச்சாட்டுகளை முதல்வர் கூறுவது தவறு.
சோடியம் வேப்பர் விளக்குகள் நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டவை.சோடியம் வேப்பரின் தன்மையை குறைத்து மதிப்பிடக்கூடாது.
குழல் விளக்குகள் பொருத்துவது செலவை குறைக்கும் என்று முதல்வர் கூறினார். குழல்விளக்குகளுக்கு பதிலாக ஹரிகேன் விளக்கை (மண்ணெண்ணெய் விளக்கு)பயன்படுத்தினால் மேலும் செலவு குறையும் என்று கோ.சி.மணி கூறினார்.
கோ.சி மணி இவ்வாறு பேசியதை தி.மு.க உறுப்பினர்கள் மேஜையை தட்டிவரவேற்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications