சென்னை மேயராவாரா சுலோச்சனா சம்பத்?
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சுலோச்சனா சம்பத் மேயர் பதவிக்குப் போட்டியிடலாம் என்றுதெரிகிறது.
தமிழகத்தில்மொத்தம் 5 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலிஆகிய மாநகராட்சிகளில் தற்போது சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகியவற்றில் தி.மு.க. மேயர்கள்உள்ளனர். கோவை மற்றும் திருச்சியில் த.மா.கா. மேயர்கள் பதவியில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மேயராக தற்போது மு.க. ஸ்டாலின் உள்ளார். இங்கு நடக்கவுள்ள மேயர் தேர்தலுக்கானஅ.தி.மு.க. வேட்பாளர் விண்ணப்பங்களை அ.தி.மு.க. தலைமை பெற்றுக் கொண்டுள்ளது. சென்னை தி.மு.க.கோட்டை, வெற்றி பெறுவது சிரமம் என்ற நிலை இருந்தாலும் கூட அ.தி.மு.கவினர் மிகுந்த ஆர்வத்துடன்விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனர்.
மாநகராட்சிக் கவுன்சிலரும், சில ஆண்டுகளுக்கு முன்பு த.மா.காவிலிருந்து விலகி அ.தி.மு.கவில்சேர்ந்தவருமான கராத்தே பாலசுப்ரமணியம் மேயர் தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக பல அ.தி.மு.க பிரகர்களும் விண்ணப்ப மனு தாக்கலின்போது நேரில் வந்திருந்தனர்.ஜெயலலிதாவின் ஆதரவு தனக்கு இருப்பதா கராத்தே பாலசுப்ரமணியம் கூறி வருகிறார். இருப்பினும்கராத்தேவுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கராத்தே பாலசுப்ரமணியம் த.மா.காவில் இருந்தபோது மூப்பனாருக்கு துணையாக எப்போதுமே உடன் செல்வார்.கிட்டத்தட்ட அவரது பாடிகார்ட் போலவே அவர் இருப்பார். சாதாரண தொண்டர் அளவில் மட்டுமே அப்போதுஅவர் இருந்தார்.
ஆனால் அ.தி.மு.கவிற்கு வந்தபின் அவரது நிலை மாறியது. மாநகராட்சிக் கூட்டங்களின்போது அ.தி.முக சார்பில்அக்கட்சியின் தலைவரை விட கராத்தே பாலசுப்ரமணியத்தின் நடவடிக்கைகள்தான் அதிகம் பேசப்பட்டன.
ஸ்டாலினுக்கு எதிராக பாலங்கள்கட்டியதில் ஊழல் என்ற புகார் மாநகராட்சிக் கூட்டங்களில் எழுப்பப்பட்டபோதும்,அதுதொடர்பாக ஆளுநர் மற்றும் தல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்கப்பட்டபோதும் கராத்தேபாலசுப்ரமணியம் முன்னணியில் இருந்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications