பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள்
இஸ்லாமாபாத்:
அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் வந்திறங்க ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க மெரைன் படைகளின் ஸ்பெஷல் சர்வீசஸ் குரூப்பின் கிரீன் சீல்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த வீரர்கள்தான் முதலில் பாகிஸ்தானுக்குள் இறங்கியுள்ளனர். இரு ராணுவ விமானங்களி இவர்கள் பாகிஸ்தானுக்குள்வந்திறங்கியுள்ளனர்.
இந்தக் குழு முதல்கட்டமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு, தீவிரவாதிகள் நடமாட்டம்ஆகியவை குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க விமானங்கள் தனது வான் வெளியில் பறந்து செல்ல வேண்டுமானால் அனுமதி தருவோம். ஆனால்,இங்கு இறங்கி தளம் அமைத்துத் தாக்க அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறி வந்தது. ஆனால்,பாகிஸ்தானை மிரட்டும் வகையில் மிரட்டி தனது படையை அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் இறக்கிவிட்டுவிட்டது.
இஸ்லாமாபாத் விமானப் படைத் தளத்திலும் ஒரு அமெரிக்க ராணுவக் குழு வந்திறங்கியுள்ளதாக பாகிஸ்தான்பத்திரிக்கையான த டான் தெரிவிக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
எந்த நேரத்திலும் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கும் எனக் கருதப்படுவதால், பாகிஸ்தான்-ஆப்கானிதான்வான் பகுதியில் தங்கள் விமானங்கள் பறப்பதை பல நாட்டு விமான நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications
