இலங்கை போர்க்கப்பல் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
திரிகோணமலையிலிருந்து 1,200 இலங்கை வீரர்களை ஏற்றிச் சென்ற போர்க் கப்பலை விடுதலைப்புலிகள்நடுக்கடலில் வழிமறித்து பயங்கரமாகத் தாக்கினர்.
சுதாரித்துக் கொண்ட கப்பலிலிருந்த இலங்கை கடற்படையினர் திருப்பித் தாக்கியதில், 2 விடுதலைப்புலிகளின்படகுகளைத் தகர்த்தெறிந்தனர்.
இதையடுத்து, காங்கேசன் துறையிலிருந்தும், பாய்ண்ட் பீட்ரோவிலிருந்தும் மேலும் சில கப்பல்கள் கிளம்பிச்சென்று, விடுதலைப்புலிகளைத் தாக்க ஆரம்பித்தன.
வான் வழியாகப் புலிகள் மீது தாக்குதல் நடத்த ஹெலிகாப்டர்களும், கபிர் ரக போர் விமானங்களும் கூட அங்குவிரைந்துள்ளன.
சண்டை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உயிர்ச்சேதம் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications