நாட்டைவிட்டு வெளியேற ஒசாமாவுக்கு ஆப்கன் மதகுருமார்கள் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காண்டகர்:

ஒசாமா பின் லேடன் தானாக ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறவேண்டும் என்று கடந்த 2 நாட்களாக நடந்தமதகுருமார்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா 3 நாள் கெடு விதித்திருந்தது. அந்த மூன்றுநாள் கெடு இன்றுடன் முடிவகிைறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்மதகுருமார்கள் கூட்டம் இன்று முடிவடைந்து. அந்தக் கூட்டத்தில் ஒசாமா பின் லேடன் தானாகஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது,

இந்த அறிவிப்பின் மூலம் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து விடுபட்டு போரைத் தவிர்க்கவிரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால் ஆப்கானிஸ்தானின் இந்த அறிவிப்பால் அமெரிக்கா சமாதானம் அடையமா என்பது சந்தேகமே.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற