பாகிஸ்தானில் மதவாத அமைப்புகள் ஸ்டிரைக் - போலீஸ் தடியடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள மதவாத அமைப்புகள் இன்று ஸ்டிரைக்நடத்தின.

அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்குக் காரணமான பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் என்று ஆப்கனின்தலிபான் அரசிடம் அமெரிக்கா கேட்டது. ஆனால், லேடனை ஒப்படைக்க தலிவான் அரசு மறுக்கவே, ஆப்கன் மீதுபோர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்தது.

இதையடுத்து, பாகிஸ்தானின் முழு அனுமதியோடு, ஆப்கன் எல்லையில் அமெரிக்காவின் படைகள் குவியஆரம்பித்தன. தன்னுடைய வான் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளவும் அமெரிக்காவுக்குப் பாகிஸ்தான்அனுமதியளித்தது.

ஆனால், இஸ்லாமிய நாடான ஆப்கனைத் தாக்குவதற்கு பாகிஸ்தானிலுள்ள பல மதவாத அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்தன. ஆப்கனைத் தாக்கக் கூடாது என்று, கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் மதவாத அமைப்புகளும்,தீவிரவாதிகளுக்கு ஆதரவான சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்கக்கூடாது என்றுவெள்ளிக்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த முழு அடைப்பின்போது, அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல்,அந்நாட்டு ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் உருவ பொம்மையையும் பாகிஸ்தான் மதவாதிகள் எரித்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தானின் பல நகரங்களிலும் கலவரம் வெடித்தது. கராச்சியில், சாலையில் சென்று கொண்டிருந்தவாகனங்கள் மீது, கலவரக்காரர்கள் கல்வீசித் தாக்கினர்.

கலவரக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். வன்முறையாளர்களைடக் கலைப்பதற்காக,வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் அவர்கள் நடத்தினர்.

ஸ்டிரைக் காரணமாக, பாகிஸ்தான் முழுவதும் போக்குவரத்து தடைபட்டிருந்தது. வர்த்தக நிறுவனங்களும், கல்விநிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள், எந்த நேரத்திலும்ஆப்கனைத் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற