கனடாவிற்கான பாக்.தூதர் கார் விபத்தில் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒடாவா:

கனடாவிற்கான பாகிஸ்தான் தூதர் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.

கனடாற்விற்கான பாகிஸ்தான் தூதர் டாரிக் அல்டாஃப் (வயது 55).

இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் கனடாவிற்கான பாகிஸ்தான் தூதராகபணியாற்றி வருகிறார்.

இவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்துஅவர்கள் கூறியதாவது:

கனடாவின் பிரதமர் இல்லத்திற்கு முன் அல்டாப் பயணம் செய்து கொண்டிருந்த கார்விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இந்த கார் விபத்தில் அல்டாஃபின் கார் டிரைவரும், அதில் பயணம் செய்த மேலும் 3பேரும் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கும், அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறினர்.

கனடாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கார்ல் ஷெவ்நெகர் கூறுகையில்,அல்டாஃப் கனடா மக்களின் அன்புக்கு பாத்திரமானவர்.

இவர் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு நிலவ உதவியவர் என்று புகழாரம்சூட்டினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற