சீக்கியத் தலைவர்கள் புஷ்ஷை சந்தித்தனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்

அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் மீத நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி சீக்கிய மதத் தலைவர்கள் அமெரிக்கஅதிபர் புஷ்ஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

அமெரிக்காவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்ட பின் லேடன் தலைமையிலான தீவிரவாத அமைப்பு மீதுஅமெரிக்க மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அரேபியர்களைப் போல சீக்கியர்களும் தாடி, தலையில் டர்பனுடள்காட்சியளிப்பதால், அமெரிக்கர்கர்கள் இவர்களைத் தாக்குகிறார்கள்.

இந்தத் தாக்குதலில் கடந்த வாரம் ஒரு சிங் கொல்லப்பட்டார்.

மேலும் பல சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய மதத்தலைவர்கள் அமெரிக்க அதிபர்புஷ்ஷைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க சீக்கிய மக்கள் தலைவர் ரஜ்வான்ந் சிங் கூறியதாவது,

அமெரிக்கர்கள் எங்கள் மதத்தினரைத் தவறாகப் புரிந்துகொண்டு, தாக்குதல் நடத்திவருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அதிபரைச் சந்தித்துக் கூறினோம். மேலும் நாங்கள் இன்னும் அமெரிக்காவிற்காககவும், அமெரிக்கமக்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றோம்.

மற்ற மதத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சீக்கியமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் புஷ் உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற