தலிபன் படைகள் சுட்டு வீழ்த்தியது அமெரிக்க விமானமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லமாபாத்:

தலிபன் படையினர் சுட்டு வீழ்த்தியது அமெரிக்காவின் வேவு விமானம் தானா என்றுதெரியவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதர் கூறினார்.

அமெரிக்காவின் வேவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக தலிபன் ராணுவம்கூறியது.

ஆனாலும் இது அமெரிக்க விமானம்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றுபாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதர் முல்லா அப்துல் சலாம் ஜயீப் கூறியுள்ளார்.

முல்லா அப்துல் சலாம் ஜயீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், தலிபன் படைகள் சுட்டுவீழ்த்தியது அமெரிக்க விமானம் தானா என்று உறுதி செய்யப்படவில்லை.

எங்கள் வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைந்த பகுதிகளை சோதித்துவருகிறார்கள்.

தலிபன் படையின் இந்த நடவடிக்கை எங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்குஎங்களால் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்பதை உணர்த்தும் என்றார்.

இதற்கிடையில் அந்த விமானம் தலிபான்களுக்கு எதிர் இயக்கமான நார்தன்அல்லயன்ஸ் அப்ைபினருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஆப்கானில் தலிபான்களுக்கும், நார்தன் அல்லயன்ஸ் அமைப்பினருக்கும்உள்நாட்டுப் போர் ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற