சமூக நீதி காத்த ஜெ.-வீரமணி புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்தீர்ப்பை ஏற்று தனது பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்துள்ளார். இதைபாராட்டுகிறேன்.

தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

மேலும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரைமுதல்வராக்கியுள்ளதன் மூலம் சமூக நீதியை காப்பதில் தான் எவ்வளவு உறுதியாகஇருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

இதை நான் வரவேற்கிறேன்.

புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பீடு நடை போட்டு செயல்பட வாழ்த்துகிறேன் என்றுகூறியுள்ளார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற