சென்னை விமான நிலையத்துக்கு மத்திய படை பாதுகாப்பு
சென்னை:
சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விரைவு அதிரடிப் படை பாதுகாப்புப் (குயிக் ரியாக்ஷன் போர்ஸ்)போடப்பட்டுள்ளது. இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ் பிரிவில் இருந்து இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் சீனஎல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 24ம் தேதி இலங்கையில் விமான நிலையங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலையடுத்துஇந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
உடனடியாக அந்தந்த மாநில போலீசாரைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்திய மத்திய அரசு இப்போது இந்த விமான நிலையபாதுகாப்புக்கென விரைவு அதிரடிப் படையினரை அனுப்பி வைத்துள்ளனர். இனி இவர்கள் நிரந்தர பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள்.
சென்னை மட்டுமின்றி மும்பை சர்வதேச விமான நிலையத்திலும் இந்தப் படையினர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
