நிலக்கரி ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஜெ. மீண்டும் ஆஜராக உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 10ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.6.5 கோடி ஊழல் செய்ததாகஅவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் டி.வி. வெங்கட்ராமன்மற்றும் என். ஹரிபாஸ்கர் மேலும் முன்னாள் தொழில்துறை செயலாளர் சி. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதும்வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை 1999ம் ஆண்டு ஜுன் மாதம் 16ம் தேதி விசாரித்த சிறப்பு நீதிபதி வி. ராதாகிருஷ்ணன்ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதிசெய்தது.

ஆனாலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்டோர் மீது வழக்குவிசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவையும் இந்தவழக்கில் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து வரும் நீதிபதி எஸ்.எஸ்.பி. தார்வேஷ்,ஜெயலலிதாவை அக்டோபர் 10ம் தேதி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவுபிறப்பித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனை விசாரணைக்காக அடுத்த மாதம் 9ம் தேதி வருமாறும், மற்றவர்கள் 8ம்தேதி ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற