6ம் வகுப்பு மாணவனை தீ வைத்து எரித்த 10ம் வகுப்பு மாணவர்கள்: சேலத்தில் பயங்கரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்:

பரிட்சையில் காப்பியடித்ததை ஆசிரியரிடம் காட்டிக்கொடுத்ததாக ஜூனியர் மாணவர் ஒருவரை 2 சீனியர்மாணவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த மாணவன் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப்போராடிவருகிறான்.

சேலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதும்போது லோகேஷ் என்ற 6ம் வகுப்பு மாணவனுக்குஇருபுறமும் 10ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.

அப்போது அந்த 10 ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரும் காப்பியடித்துள்ளனர்.

இதைக்கண்ட ஆசிரியர் அந்த மாணவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த மாணவர்கள்காப்பியடிக்கவே இல்லை என்று மறுத்துள்ளனர்.

எனவே ஆசிரியர் அருகில் இருந்த லோகேசிடம் கேட்டுள்ளார். அதற்கு லோகேஷ் "ஆமாம்" என்று உண்மையைக்கூறியுள்ளான். இதனால் அந்த 2 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பிறகு வீட்டுக்கு வந்தவுடன் லோகேசைத் தனியாக அழைத்துச்சென்ற அந்த 2 மாணவர்களும், அவன் மீதுமண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டனர்.

இதில் லோகேசின் உடம்பில் மளமளவென தீ பற்றி எரிந்தது.

தீயில் லோகேசின் 80 சதவீத உடம்புப்பகுதி கருகிவிட்டது. அவன் இப்போது மருத்துவமணையில் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கிறான்.

இதையடுத்து போலீசார் அந்த 2 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற