பெங்களூர்-மதுரை இடையே வாரம் ஒரு நாள் சிறப்பு ரயில்
பெங்களூர்:
பெங்களூர்-மதுரை நகர்களுக்கு இடையே வாரத்தில் ஒரு நாள் ஓடும் சிறப்பு ரயில், நவம்பர் 3ம் தேதி முதல்இயக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டும் பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், தென்னகரயில்வே 640 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அந்த வகையில், பெங்களூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்தில் ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நவம்பர் 3ம் தேதியிலிருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து இரவு 7.15மணிக்கு மதுரைக்குக் கிளம்பும். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணிக்கு அதே ரயில் மதுரையிலிருந்துபெங்களூருக்குக் கிளம்பும்.
இந்த சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி வரை ஓடும் என்று கூறப்படுகிறது.
அதே போல், பெங்களூர்-காயாங்குளம் இடையே வாரம் 2 முறை சிறப்பு ரயில் விடப்படுகிறது. நவம்பர் 19ம் தேதிமுதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
திங்கள் மற்றும் புதன்கிழமை இரவு 10 மணிக்கு பெங்களூரிலிருந்து காயாங்குளத்துக்குச் செல்லும் இந்த சிறப்புரயில், காயாங்குளத்திலிருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பெங்களூருக்குக் கிளம்பும்.


Click it and Unblock the Notifications
