அமெரிக்க தாக்குதல் எதிரொலி: திருப்பதி கோவிலில் தீவிர பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதி, திருமலை பெருமாள் கோவிலுக்குள் பக்தர்கள் பையுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, திருமலையில் உள்ளது அருள்மிகு வெங்கடாசலபதி கோவில். இங்குபெருமாளின் அருள் பெற லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்துசெல்கின்றனர்.

வருடந்தோறும் அங்கு திருவிழா கோலாகலம்தான். கடந்த 29ம் தேதி பிரம்மோற்சவம்கோலாகலமாக நடந்து முடிவடைந்தது.

இந்நிலையில் திருமலை பெருமாள் கோவிலுக்குள் பக்தர்கள் பையுடன் செல்லவதுதடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்தியாவிலும் அதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம் எனக் கருதப்படுகிறது. தீவிரவாதிகள் கோவிலுக்குள்புகுந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு பக்தர்கள்ஒத்துழைப்பு தர வேண்டும் என்று திருமலை தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற