புதுக்கோட்டை அருகே 7 மன நோயாளிகள் சாவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சங்கிலியால் பினைக்கப்பட்டிருந்த 7 மன நோயாளிகள் இறந்துவிட்டதாக கூறப்படும் தகவல் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

கீரனூர் அருகே உள்ள ஓடுகம்பட்டி. இங்குள்ள ஒரு தர்காவில், ஏர்வாடியில் இருந்ததைப் போன்றே மனநோயாளிகள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டனர்.

ஏர்வாடியில் மன நோயாளிகள் காப்பகங்கள் மூடப்ட்டதையடுத்து தமிழகம் முழுவதிலும் பல இடங்களிலும் மனநோய்க் காப்பகங்கள் மூடப்பட்டன. ஆனால் அரசின் உத்தரவையும் மீறி சில இடங்களில் இவை இயங்கி வந்ததாககூறப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் ஓடுகம்பட்டி தர்கா மன நோயாளிகள் காப்பகம்.

இந்தக் காப்பகத்தில் அடிப்படை வசதிகளே கிடையாதாம். மன நோயாளிகள் சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான சாப்பாடு கொடுக்கப்படுவது கிடையாதாம். சப்தம் போட்டால்கடுமையாக அடிக்கப்படுவார்களாம்.

இந்தக் கொடுமைகள் காரணமாக இதுவரை 7 பேர் வரை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்துத் தகவல்அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற