த.மா.கா. போட்டி வேட்பாளர்களுக்கு வாசனின் அன்பான வேண்டுகோள்
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் அதிகாரபூர்வவேட்பாளர்களை எதிர்த்தும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தமாகாவினர் தங்கள் வேட்புமனுவை வெள்ளிக்கிழமைக்குள்திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் தலைவர் மறைவு அதிர்ச்சி மறையும் முன் நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
நமது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டுஅவர்களுக்கு நமது கட்சியின் சார்பாக அங்கீகார கடிதமும் வழங்கப்பட்டு விட்டது.
திறமையும், விசுவாசமும் உள்ள பலருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவாய்ப்பளிக்க இயலவில்லை. தோழமை கட்சிகளுடன் கூட்டணி அடிப்படையில்போட்டியிடுவதால் தகுதியுள்ள பலருக்கும் தேர்தலில் போட்டியிடவாய்ப்பளிக்கவில்லை.
நமது கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும், நமதுதோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதமாகாவினர் தங்கள் வேட்புமனுவை வெள்ளிக்கிழமைக்குள் திரும்ப பெறுமாறுஅன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் தாங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்ற விவரத்தை நமது தலைமைநிலையத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில்கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications