எங்களை பாகிஸ்தான் உருவாக்கவில்லை: தலிபான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லமாபாத்:

தலிபான் அரசு பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டது என்று கூறுவது தவறு என்றுஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசின் தலைவர் முல்லா முகமது ஒமர்கூறியுள்ளார்.

தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களை ஆட்சியில் அமர்த்தியது பாகிஸ்தன்தான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் ஒமர் இதை மறுத்துள்ளார்.

பின்லேடனின் மகளைத் தான் ஒமர் மணம் முடித்துள்ளார்.

காண்டஹார் வானொலியில் நேற்று (புதன்கிழமை ) இரவு நிகழ்த்திய உரையில் ஒமர்கூறியதாவது:

தலிபான் அரசு பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டதாக இருந்திருந்தால் ஒசாமா பின்லேடனை ஒப்படைத்திருப்போம். பின் லேடனை ஒப்படைக்க முடியாது என்று கூறிவருவதன் மூலமே தலிபான் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டது அல்ல என்பதற்குபோதிய ஆதரமாகும்.

மேலும் தலிபான் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டது என்று கூறுபவர்கள் ஒன்றைசிந்தித்து பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானில் பலம் வாய்ந்து விளங்கும் முஜாஹுதின் தலைவர்கள் மற்றும்முஜாஹுதின் கமான்டர்களை விடுத்து சிறய கிராமத்தில் பிறந்த என்னை எப்படிதலிபான் இஸ்லாமிய இயக்கத்துக்கு தலைவராக்க பாகிஸ்தானால் முடியும்.

இதுவும் தலிபானை உருவாக்கியது பாகிஸ்தான் அல்ல என்பதை விளக்கும்.

தலிபான் அரசை கவிழ்த்துவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர்ஜாகீர்ஷா தலைமையில் ஆட்சி அமைக்க அமெரிக்க முயல்கிறது. அதைஆப்கானிஸ்தான் மக்கள் தடுக்க வேண்டும். எந்த காலத்திலும் ஆப்கானிஸ்தானின்தன்மானத்தையும், இறையான்மையையும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.

ஜாகீர்ஷா மன்னராக இருந்த போது ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கம்யூனிஸ்டுகள்பறித்துக் கொள்ள வழி வகுத்தார்.இப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள்ஆட்சிக்கு வழி வகுக்கப் போகிறார்.

ஆப்கானிஸ்தானிற்குள் சோவியத் ரஷ்யா நுழைந்ததையும் அதையடுத்து ஏற்பட்டகலகத்தில் ஆப்கானிஸ்தானின் அப்பாவி மக்கள் 15 லட்சம் பேர் உயிரிழந்ததையும்நம்மால் மறக்க முடியாது. இதற்கு காரணம் ஜாகீர்ஷாதான்.

ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு அல்லாவின் அருள் கிடைக்கும்.ஆனால் எதிர்ப்பவர்கள் இஸ்லாம் மதத்திற்கு அவமானம் தேடித்தருபவர்களாகத்தான்இருப்பார்கள். ஏனென்றால் என்றும் இஸ்லாமிய மத கொள்கைகளை பின்பற்றும்ஆப்கானிஸ்தானை எதிர்க்கும் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்எல்லோருமே இஸ்லாமை அவமதிப்பவர்கள்தான்.

ஆப்கானிஸ்தான் மீ-து அமெரிக்கா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளஆப்கானிஸ்தான் மக்கள் தயாராக இருக்க வேண்டும். நாம் சுதந்திரத்தைவிரும்புகிறவர்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்-று கூறி-னார்.

ஒமர் புஷ்தூன் மொழியில் உரையாற்றினார். இது மொழி மாற்றம் செய்யப்பட்டுபாகிஸ்தான் நாளிதழான தி டெய்லியில் பிரசுரிக்கபட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற