தலிபான்கள் மீது எதிர்ப் படையினரும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

பர்காம் (வடக்கு ஆப்கானிஸ்தான்):

தலிபான் ராணுவத்தின் மீது அமெரிக்க-பிரிட்டன் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தலிபான்கள் மீதுநார்த்தர்ன் அலையன்ஸ் எதிர்ப் படையினரும் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க விமானங்கள் 9 மணிக்கு தாக்குதலைத் தொடங்கின. அடுத்த 1 மணி நேரத்தில் தலிபான்கள் மீது நார்த்தர்ன்அலையன்ஸ் படையினரும் தாக்குதலைத் தொடங்கினர்.

தலைநகர் காபூலில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள பர்காம் விமானப் படைத் தளத்தில் இருந்து இத் தாக்குதலை நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர் நடத்தினர். அவர்கள் மீது தலிபான்கள் முந்தைய சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட பி.எம்.-21 ரகராக்கெட்டுகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர்.

பர்காம் விமானப் படைத் தளத்தை அமெரிக்காவும் பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.

நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது. தலிபான்களுக்கு எதிராக தரையில்தாக்குதல் நடத்த இந்தப் படையினரின் உதவியை அமெரிக்கா கோரும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+