டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி
டெல்லி:
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்குபரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்ததகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
காலை 11.20 மணியளவில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
தொலைபேசியில் பேசிய மர்ம நபர், டெல்லி உயர் நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டுதொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இந்தச் செய்தி போலீசுக்கு தெரியப்படுத்தப்பட்டது. விரைந்து வந்த போலீசார், உயர் நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றிவளைத்தனர். அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்றசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால், உயர் நீதிமன்றம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை . எனவேவெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி வெறும் புரளி என்று தெரியவந்தது.












Click it and Unblock the Notifications