கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் வேறு தொழில் செய்ய அரசு உதவி - பன்னீர்
சென்னை:
கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து, அவர்களைத் தண்டிக்காமல், அவர்களுக்கு வேறு தொழில் செய்யஅரசு உதவி செய்யும் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்.
தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராயத் தொழிலை எவ்வாறு தடை செய்வது என்பது குறித்து தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் உயர் அதிகாரிகளுடன் இன்று ( திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை கோட்டூர் அருகே விற்கப்பட்ட விஷச் சாராயத்தை குடித்த 36 பேர் இறந்துபோனார்கள். மேலும் 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் பெருகி வரும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், இதனால் யாரும் இறக்காமல் பாதுகாக்கவும்எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உயர் அதிகாரிகளுடன்திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் கூறியதாவது:
கள்ளச்சாரயத்தில் கலந்த விஷ திரவமான மெத்தனால் இனி பொதுமக்களுக்கு கிடைக்காத விதம் தடைசெய்யப்படும். தமிழகத்தில் 160 தொழிற்சாலைகள் மெத்தனாலை உபயோகிக்கின்றன. இதுவரைதொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மெத்தனால் குறித்து கலெக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
இனி மதுவிலக்கு கமிஷனரே, மாதந்தோறும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மெத்தனால் குறித்துகண்காணிப்பார்.
கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து, அவர்களைத் தண்டிக்காமல், அவர்களுக்கு வேறு தொழில் செய்யஏற்பாடு செய்வோம். அவ்வாறு தொழில் தொடங்க அரசு அவர்களுக்கு முழு உதவியையும் செய்து கொடுக்கும்என்றார் பன்னீர்செல்வம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications