இந்திய விமானத்தைக் கடத்த உதவிய ஐ.எஸ்.ஐ. தலைவர் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உளவுப் பிரிவு (ஐ.எஸ்.ஐ.) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல்மெஹ்மூத் அகமதை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்ததையடுத்து அவரை பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இது தவிர பாகிஸ்தான் ராணுவத்தின் பல மூத்த அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

பின் லேடனை ஒப்படைக்குமாறு தலிபான்களைச் சந்தித்து வலியுறுத்த ஐ.எஸ்.ஐ. டைரக்டர் ஜெனரலாக இருந்த மெஹ்மூதைத் தான் பர்வேஸ்முஷாரப் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கும் 1999ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதைஅமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. விமானப் பயணிகளைக் காப்பாற்ற இந்தியா விடுவித்த 3 தீவிரவாதிகளில் ஒருவரான உமர் ஷேக்குக்கும்மெஹ்மூதுக்கும் இடையே தொடர்பு உள்ளதையும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இந்த உமர் ஷேக் தான் அமெரிக்காவில் விமானத்தைக் கடத்தி உலக வர்த்தக மையத்தில் மோதிய முகம்மத் அட்டாவுக்கு 1 லட்சம்அமெரிக்க டாலர் பணம் கொடுத்து உதவியுள்ளார். அட்டாவுக்கு பணம் கொடுக்கச் சொன்னதே ஐ.எஸ்.ஐ. டைரக்டர் ஜெனரல் தான்என்பதும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய விமானத்தைக் கடத்தியவர்களுக்கும் அமெரிக்காவில் விமானத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையேதொடர்பு இருக்கிறது என்று இந்தியா தொடர்ந்து கூறி வந்தது இப்போது உண்மையாகிவிட்டது.

சமீபத்தில் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரிடமும் வாஜ்பாய் இதைத் தெரிவித்தார்.

இந்திய புலனாய்வு அமைப்புகளும், ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகளும் வழங்கிய பல்வேறு ரகசிய தகவல்களைக் கொண்டுஆராய்ந்ததன் மூலம் தான் ஐ.எஸ்.ஐ. டைரக்டர் ஜெனரலுக்கும் விமானத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் தலிபான்களுக்கும் உள்ளதொடர்பை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.

நேபாளத்திலிருந்து இந்தியா வந்து கொண்டிருந்த விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஆப்கானிஸ்தானின்காண்டஹார் விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

இந்தியச் சிறைகளில் இருந்த உமர் ஷேக், மெளலானா மசூத் ஸார், முஸ்தாக் அகமத் ஆகிய 3 தீவிரவாதிகளை விடுவித்தால் தான் விமானப்பயணிகளை விடுவிப்போம் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்ததால் இவர்களை விடுவித்து பயணிகளை இந்தியா பத்திரமாக மீட்டது.ஒரு பயணியை தீவிரவாதிகள் குத்திக் கொன்றுவிட்டனர் என்பதும் நினைவு கூறத்தக்கது.

ராணுவ அதிகாரிகள் மாற்றம்:

ஐ.எஸ்.ஐ. டைரக்டர் ஜெனரலோடு சேர்த்து பல அதிகாரிகளையும் அதிபர் பர்வேஸ் முஷாரப் மாற்றியுள்ளார்.

ராணுவத்தின் மிக மூத்த ஜெனரகளான லெப்டினன்ட் ஜெனரல் முகம்மத் அஸிஸ் கான், லெப்டினன்ட் ஜெனரல் முகம்மத் யூசுப் தியஇருவரையும் வேறு பதவிகளில் முஷாரப் நியமித்துள்ளார்.

அஸிஸ் கானுக்கு பதவி உயர்வு என்ற பெயரில் அதிகாரம் இல்லாத ராணுவப் பதவி வழங்கப்பட்டுள்ளது. யூசுப் துணை ராணுவத்தளபதியாக்கப்பட்டுள்ளார். இதில் அஸிஸ் கானின் உதவியோடு தான் பர்வேஸ் முஷாரப் ஆட்சியைப் பிடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+