தொடர் மழையால் நிரம்பும் மதுராந்தகம் ஏரி
சென்னை:
தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேய் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் வேகமாகநிரம்பி வருகின்றன.
ஏரிகள் மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி வருகின்றன. குறிப்பாகமதுராந்தகம் ஏரி அதிவேகமாக நிரம்பி வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதே இதற்குக்காரணம்.
இன்னும் 3-4 நாட்களில் மதுராந்தகம் ஏரி முழுவதுமாக நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்துஏரியின் எந்தப் பக்கமும் விரிசல் வந்து விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளில் பொதுப்பணித்துறையினர்ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும் உஷார்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே சென்னை நகரில் தொடர்ந்து சனிக்கிழமை இரவும் நல்ல மழை பெய்தது. வழக்கம் போல மாலை 5மணியளவில் ஆரம்பித்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்தது. காலையில்தான் மழை நின்றது. இந்தமழை இன்னும் 36 மணி நேரத்திற்குத் தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஜெர்மனி நாட்டு விமானம் மழை காரணமாக தரையிறங்கமுடியாமல் பெங்களூர் விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை நிள்ளிரவு அனுப்பப்பட்டது.
பின்னர் இந்த விமானம் சனிக்கிழமை அதிகாலை சென்னைக்கு மீண்டும் வந்தது. அப்போதும் தொடர்ந்து மழைபெய்து வந்ததால் மீண்டும் பெங்களூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
அதன் பிறகு சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல்தான் விமானம் சென்னையில் தரையிறங்க முடிந்தது. இதுபோல பலவிமானங்களும் மழை காரணமாக தாமதமாகவே வந்து சென்றன.












Click it and Unblock the Notifications