ஈரோடு ரயில் நிலையத்தில் தவித்த 5 சிறுவர்கள் மீட்பு
ஈரோடு:
ஈரோடு ரயில் நிலையத்தில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த 5 சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டு,அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு ரயில்வே போலீசார் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தபோது, 5 சிறுவர்கள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு"திருதிரு"வென்று முழித்துக் கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்த 5 சிறுவர்களுமே கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரிய வந்தது.
சங்கர் கணேஷ் (14), மோகன்குமார் (12), சூரிய கணேஷ் (12), நாகராஜ் குமார் (13) மற்றும் விஜயராகவன் (15)ஆகிய இந்த 5 சிறுவர்களும் கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர் என்பதும்தெரிய வந்தது.
கடந்த மாதம் நடந்த காலாண்டுத் தேர்வில் அச்சிறுவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளதால், வீட்டில்பெற்றோர்கள் திட்டுவார்கள் என்பதற்குப் பயந்துதான் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பெங்களூர் சென்று வேலை செய்ய முடிவெடுத்த இந்த 5 சிறுவர்களும், தங்கள் வீடுகளிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி-பெங்களூர் ரயிலில் புறப்பட்டு விட்டனர்.
ஈரோட்டிற்கு ரயில் வந்தவுடன், பெங்களூர் என்று நினைத்து 5 பேரும் இறங்கிவிட்டனர். போலீசில் மாட்டிக்கொண்டனர்.
ஈரோடு ரயில்வே போலீசார் உடனே கோவில்பட்டியிலுள்ள அச்சிறுவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல்கொடுத்தனர். பெற்றோர்களும் விரைந்து வந்து, தங்கள் குழந்தைகளைக் கூட்டிச் சென்றனர்.
தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்டு, தங்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு அந்தப் பெற்றோர்கள் நன்றிதெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications