அசுத்த நீரை குடித்த 4 பேர் சாவு - பலருக்கு வயிற்றுப் போக்கு
ஆரணி:
ஆரணி அருகே வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 பேர் இறந்து போயுள்ளனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில்சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஆரணி அருகில் உள்ளது அக்ராபாளையம் இங்கு வசித்து வந்த அலமேலு (80) என்பவருக்கு கடந்த 4ம் தேதி கடும்வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உ.யிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதேஊரைச் சேர்ந்த முனியம்மாள் (72) என்பவரும் வயிற்றுபோக்கால் இறந்து போனார்.
வயிற்றுபோக்கு காரணமாக 2 பேர் அடுத்தடுத்து இறந்து போனது அந்த பகுதியில் வாழும் மக்களிடம் பயத்தைஏற்படுத்தியது. இந்நிலையில் மணியகவுண்டர்(70), செல்லியம்மாள் (75) என்ற மேலும் 2 பேர் வயிற்றுபோக்கால்இறந்து போனார்கள். இது மக்களிடம் மேலும் பீதியை அதிகமாக்கியது.
இதே சமயம் வயிற்றுபோக்கு காரணமாகஅக்கராபாளையத்தைச் சேர்ந்த ராஜகோபால் , வத்சலா, பேபி அம்மாள்,துளசி, குமாரவேலு, கார்த்திகேயன், பார்திபன், ஞானசவுந்தரி, விஜயா உள்ளிட்ட 11 பேர் அக்ராபாளையம்சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாசில்தார், வருவாய் அதிகாரி, ஆரணி ஒன்றிய ஆணையாளர் ஆகியோர்சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
அக்ராபாளையத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் குறைவாக வந்த காரணத்தால் அந்த பகுதி மக்கள் பள்ளம் தோண்டிதண்ணீர் எடுத்துவந்தனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக மழை நீர் அந்த பள்ளங்களில் தேங்கியது. மேல் நிலை தொட்டிக்கு நீரைமோட்டார் மூலம் ஏற்றும் போது பள்ளத்தில் தேங்கியிருந்த அசுத்த நீரும் சேர்ந்து தொட்டியில் ஏறியதாககூறப்படுகிறது.
அந்த அசுத்தமான தண்ணீரை பயன்படுத்தியதால் வயிற்றுபோக்கு ஏற்பட்டதகாவும் கூறப்படுகிறது. இதையடுத்துமேல் நிலை தொட்டியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளங்கள் தோண்டிதண்ணீர் எடுக்கவேண்டாம் என்றும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications