இலங்கை: 9 ஆளும் கட்சி எம்.பிக்கள் விலகல்
கொழும்பு:
இலங்கையில் ஆளும் மக்கள் கூட்டணி கட்சியிலிருந்து 9 எம்.பிக்கள் விலகி எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) ஒரு எம்.பி. விலகி எதிர்கட்சியில் சேர்ந்ததார். இதைத்தொடர்ந்து இன்று 8பேர் முன்னாள் அமைச்சர் திசநாயகே தலைமையில் கட்சியிலிருந்து விலகி எதிர் அணியில் இணைந்துள்ளனர்.
இதனால் பதாராளுமன்றத்தில் 119 ஆக இருந்த மக்கள் கூட்டணியின் பலம், தற்போது 110 ஆகக் குறைந்துள்ளது.பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பிணர்களின் எண்ணிக்கை 225 என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத்தொடர்ந்து மேலும் பல ஆளுங்கட்சி எம்.பிக்கள் விலகுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 6 எம்.பிக்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இன்னும் தனது நிலையை அறிவிக்கவில்லை.இந்தக் கட்சி கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருந்து விலகியது. எனவே இந்தக்கட்சியும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியிலிருந்து விலகுவதற்குக் காரணம், ஜனதா விமுக்தி பெரமுணாவு கட்சியுடன்(ஜே.வி.பி.) குமாரதுங்கா கூட்டணி வைத்துக்கொண்டதுதான் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஜே.வி.பியுடன் உடன்பாடு வைத்துக்கொண்டு ஒரு ஆண்டுக்கு அந்தக் கட்சியின் ஆதரவை மக்கள்கூட்டணி கேட்டிருந்ததது. அதற்கு ஜே.வி.பி. தரப்பில் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையைபாதியாகக் குறைக்க வேண்டும் என்று அந்தக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. மக்கள் கூட்டணியும் அதை ஏற்று பலஅமைச்சர்களின் பதவியைப் பறித்தது.
இதையடுத்து திசநாயகே, மகிந்தா விஜய சேகரா, விஜயபால மென்டிஸ் ஆகிய பதவி இழந்த அமைச்சர்கள்கட்சியை விட்டும் விலகினர்.
எதிர்கட்சித் தலைவரான ரணில்விக்ரமசிங்கே தலைமையிலான யுனைட்டெட் நேஷனல் பார்ட்டிக்கு 88 எம்.பிக்கள்ஆதரவாக உள்ளனர்.
மேலும் தமிழ் கட்சிகளின் 9 எம்.பிக்களும் ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் சந்திரிகா அரசு தப்புவது மிகக்கடிமான ஒன்று என்றுகூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications