ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: மேயர் தேர்தல் முடிவை வெளியிட தடை
சென்னை:
சென்னை மேயர் தேர்தல் முடிவுகளை அடுத்த உத்தரவு வரும்வரை வெளியிடக் கூடாது என்று மாநிலத் தேர்தல்ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் தற்போதையமேயர் ஸ்டாலின் உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் மேயராக இருக்கும்போது மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியிடக் கூடாது என்ற சவட்டப்பிரிவைஎடுத்துக்காட்டி சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதர் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மக்கள் பிரதிநிதித்துச் சட்டம் 30 வது பிரிவின்படி மேயராகவோ, துணை மேயராகவோ இருப்பவர் மீண்டும்தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பதவிநீட்டிப்பு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் அவர்களின் பதவி நீட்டிப்புக்காலம் முடியும் வரை மீண்டும்போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மேயராக இருக்கும ஸ்டாலின் மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிட்டு, இந்த விதிமுறையைமீறியுள்ளார். அதனால் அவர் போட்டியிடத் தகுதியில்லாதவர் என்று அறிவிக்கவேண்டும் என்றும் அதில்கூறியுள்ளார்.
மேலும் இந்தச் சட்டப்பிரிவு சென்னை மாநகராட்சிக்கு மட்டும்தான் பொருந்தும். மதுரை கோவை உள்ளிட்ட மற்றமாநகராட்சிகளுக்கு கடந்த 1994ம் ஆண்டு இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த மனுவை விசாரணைக் ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பாஷன் ரெட்டி, மற்றும நீதிபதிசிவப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை வரும் 18ம் தேதிக்குத் ஒத்திவைத்தனர்.
மேலும் உயர்நீதிமன்றம் அடுத்த உத்தரவு வெளியிடும் வரை சென்னை மேயர் தேர்தல் முடிவுகளை தேர்தல்கமிஷன் வெளியிடக் கூடாது என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்தப்பரபரப்பான உத்தரவையடுத்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் திமுகவட்டாரங்கள் கலக்கமடைந்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications