"டான்சி நிலத்தை விற்கும் முடிவை அரசுதான் எடுத்தது"
சென்னை:
டான்சி நிலத்தை விற்கவேண்டும் என்ற முடிவைத் தமிழக அரசுதான் எடுத்தது என்றும், அந்நிறுவனத்தின் முன்னாள்இயக்குநர் எந்த முவையும் எடுக்கவில்லை என்றும் அவரின் வக்கீல் வாதாடினார்.
டான்சி நிலம் குறித்த வழக்கில் தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துசெய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 8 நாட்களாக நடந்துவருகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) டான்சி றிநுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி.ஆர்.சீனிவாசனின் சார்பில் அவரதுவக்கீல் சத்திய நாராயணன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கோர்ட்டில்கூறியதாவது,
கடந்த 22.11.1991ம் தேதி டான்சி நிலத்தை விற்பது குறித்து பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த 4 டெண்டர்களில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் அளித்த டெண்டர் தான் அதிக விலைக்குக்கேட்டிருந்ததது. இந்த டெண்டர்கள் அனைத்தும் டான்சி இயக்குநர்கள் முன்புதான் பிரித்துப் பார்க்கப்பட்டது.
ஜெயா பப்ளிகேஷனுக்கு விற்பது குறித்து துணைக்குழுவின் முடிவிற்கும் விடப்பட்டது. அந்தக் குழுவும் பரிசீலித்துஅதை அரக்கு அனுப்பிவைத்தது. இறுதியாக ஜெயா பப்ளிகேஷனுக்கு நிலத்தை விற்கலாம் என்று முடிவெடுத்ததுதமிழக அரசுதான். இயக்குநர் சீனிவாசன் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மேலும் டான்சி நிலம் விற்கப்பட்டபோது அந்த நிலம் குண்டும் குழியுமாகவும், உள்ளேயிருந்த எந்திரங்கள்பழுதடைந்து பழைய இரும்புக்குப் போடும் நிலையிலும்தான் இருந்தன. எனவேதான் அந்த நிலம் குறைந்தமதிப்பீட்டில் விற்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கின் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சிறுதொழில் இணைச் செயலாளர் அபுல்ஹாசன்,மின்வாரிய சூப்பிரண்டிங் எஞ்சினியர் கிருபாநிதி, எஞ்சினியர் மாடக்கண் ஆகியோர் தனிநீதிமன்றத்தில்விசாரிக்கப்படவில்லை.
இவ்வாறு வக்கீல் சத்தியநாராயணன் வாதாடினார். இன்றும் தொடர்ந்து வாதம் நடக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications