அமெரிக்க மக்களை ஆந்த்ராக்ஸ் படுத்தும் பாடு
நியூயார்க்:
உயிர்க் கொல்லியான ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வெகு வேகமாகப் பரவி வருகின்றன என்று தகவல்கள்வந்ததையடுத்து, அமெரிக்க மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
அமெரிக்க தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் ஒருவரும் இதேபோல் தனக்கு வந்த லெட்டரைத் திறந்துபடித்துக் கொண்டிருந்தபோது, அதன் மூலமாக ஆந்த்ராக்ஸ் கிருமிகள் அவரைத் தொற்றிக் கொண்டன என்றுகூறப்படுகிறது.
அதேபோல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வந்த ஒரு பார்சலிலும் பவுடர் போன்ற பொருள் காணப்பட்டதாகக்கூறப்படுகிறது. ஆந்த்ராக்ஸ் கிருமிகள்தான் இந்தப் பவுடரில் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
உலகின் பெரும் சாப்ட்வேர் புள்ளியான மைக்ரோசாப்ட் அலுவலகமும், வாஷிங்டன் அரசு தலைமையகமும் இந்தஆந்த்ராக்ஸ் பீதிக்குத் தப்பவில்லை.
ஆந்த்ராக்ஸ் தாக்கப்பட்டதாக நியூயார்க்கில் இருந்து மட்டும் இதுவரை 6 புகார்கள் வந்துள்ளன. ஆந்த்ராக்ஸ் பீதிகாரணமாக, பலர் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டுப் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்த்ராக்ஸ் கிருமிகளை ஒசாமா பின் லேடனும் தலிபான்களும்தான் பரப்பி வருகிறார்கள் என்றுஅமெரிக்கத் துணை அதிபர் டிக் செனேய் குற்றம் சாட்டியுள்ளார்.
"இதற்காக பின் லேடன் பலருக்கும் பயிற்சி அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன" என்றுஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் ஆந்த்ராக்ஸ் பீதி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications