நாளை முடிகிறது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்
சென்னை:
செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) பிரச்சாரம்முடிவடையவுள்ளதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுளளனர்.
வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.முதற்கட்ட தேர்தல் 16ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 4 மாநகராட்சிகளிலும், 44நகராட்சிகளிலும், 307 பேரூராட்சிகளிலும், 195 ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது.
இதற்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அனைத்து அரசியல்கட்சியினரும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பில் போட்டியிடும் பாலகங்கா,காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் ஆகியோர் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.
சேலம், திருநெல்வேலி, கோயம்புத்துர் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும், நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
18ம் தேதி மதுரை, திருச்சி மாநாகராட்சிக்கும், எஞ்சியுள்ள நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சிகளுக்கும் தேர்தல்நடைபெறும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications