முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான தடை நீக்கம்
சென்னை:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையைதமிழ்நாடு மாநில நிர்வாக தீர்ப்பாணையம் நீக்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிஆசிரியர்களை தேர்ந்தெடுக்க விளம்பரம் செய்தது. மொத்தம் 634 ஆசிரியர் காலியடங்கள் நிரப்பப்படும் என்றும்அரசு அறிவித்திருந்தது.
இந்த தேர்வை எழுத இளநிலை, முதுநிலையில் ஒரே பாடத்தில் பட்டம் பெற்று, பி.எட் பயிற்சி பெற்றவர்கள்மட்டுமே தகுதியுள்ளவர்கள்.
மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் இந்ததேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் 6ம் தேதி நடைபெறும் என்றும்அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், "முதுகலை பட்டப்படிப்பில் எடுத்துக் கொள்ள பாடத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 15 ஆண்டுகளாக வேலை வாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்து என்போல் காத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று நாமக்கல்-பரமத்தியூரைச்சேர்ந்த பழனிவேலு என்பவர் சென்னை தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி அப்துல் வகாப், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கானஎழுத்துத் தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து சென்ற மாதம் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று ஆசிரியர் தீர்ப்பாயம் மனுத் தாக்கல் செய்தது.இதையடுத்து இடைக்கால தடையை நீக்கி அப்துல் வகாப் தீர்ப்பளித்தார். ஆனாலும் வழக்கு முடியும்வரை தேர்வுமுடிவை வெளியிடக்கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications