தமிழகத்திற்கு விரைவில் கிருஷ்ணா நீர்?
சென்னை:
தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விடுவது பற்றி தமிழக-ஆந்திர தலைமைச் செயலாளர்கள் விரைவில் கூடிபேசி முடிவு செய்வார்கள் என்று தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு எப்போது தண்ணீர்திறந்துவிடப்படும என்று நிருபர்கள் குற்றாலிங்கத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து குற்றாலிங்கம்கூறுகையில்,
ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீரை திறந்துவிடுவது குறித்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இரு மாநிலதலைமைச் செயலாளர்களும் அடிக்கடி சந்தித்து நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.
வரும் 18ம் தேதி இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தார்கள். ஆனால்பிரதமர் வருகை காரணாமாக இந்த பேச்சுவார்த்தை தள்ளிப் போகக்கூடும்.
ஆனாலும் விரைவில் கூட்டம் நடக்கும். அப்போது கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது குறித்துமுடிவு செய்யப்படக்கூடும்.
மேலும் ஆந்திராவில் ஸ்ரீசைலம் அணை நிரம்பி, நாகார்ஜுனா, சோமசீலா அனணகள் நிரம்பிய பின்தான்கண்டலேறு நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரும். அங்கிருந்துதான் பூண்டி நீர் தேக்கத்திற்கு தண்ணீர்வரவேண்டும்.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரத்து 115 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு3 ஆயிரத்து 440 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications