மேயர் தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை: உயர் நீதிமன்றம் திடீர் பல்டி
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் மு..க.ஸ்டாலின் போட்டியிடுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில், மேயர் தேர்தல் முடிவை வெளியிட கூடாது என்று நேற்று காலையில் தடை விதித்தநீதிமன்றம், மாலையில் அந்தத் தடையை நீக்கி உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் தற்போதையமேயர் ஸ்டாலின் உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் மேயராக இருக்கும்போது ஸ்டாலில் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடக் கூடாது என்றசட்டப்பிரிவை எடுத்துக்காட்டி சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, மற்றும நீதிபதிசிவப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை வரும் 18ம் தேதிக்குத் ஒத்திவைத்தது.
மேலும், உயர்நீதிமன்றம் அடுத்த உத்தரவு வெளியிடும் வரை சென்னை மேயர் தேர்தல் முடிவுகளை தேர்தல்கமிஷன் வெளியிடக் கூடாது என்றும் அவர்கள் முதலில் உத்தரவிட்டனர்.
ஆனால் பிற்பகலில் மு.க. ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் சோமயாஜுலு வாதாடினார். அவருடையவாதத்தின்போது:
மேயர் பதவியில் இருப்பவர் 5 ஆண்டு காலத்தில் தகுதியிழந்தால்தான் மறு தேர்தலில் போட்டியிட முடியாது.ஸ்டாலின் 1996ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மேயராக இருந்து வருகிறார்.
சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டவிதிகள் 28, 29 ஆகியவை நீக்கப்பட்-டுவிட்டன. ஆனால்துரதிர்ஷ்டவசமாக 30வது பிரிவு நீக்கப்படவில்லை. மேலும் மனுதாரர் தேர்தலில் போட்யிடவில்லை. அவர்இடைக்கால தடை கோரியும் மனு தாக்கல் செய்யவில்லை.
எனவே தேர்தல் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது தவறு என்று சோமயாஜுலு வாதாடினார்.
இதையடுத்து மனுதாரரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலசுப்ரமணியத்திற்கு நீதிபதிகள், கடும் கண்டனம்தெரிவித்தனர். இதன் பின் நீதிபதிள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
காலையில் நாங்கள் மனுவை விசாரித்த போது இடைக்காலத் தடை கேட்டு மனு செய்யவில்லை என்றுகூறியிருந்தால் இடைக்கால தடை வித்திருக்க மாட்டோம்.
மதுரை, கோயம்புத்தூர் மாநகாராட்சிக்கு தான் விதி திருத்தப்பட்டுள்ளது சென்னை மாவட்டத்திற்குதிருத்தப்படவில்லை என்று கூறியதாலும், வாய் மொழியாக தடை கேட்டதாலும் நாங்கள் தடை விதித்தோம்.
இந்த ரிட் மனுவை விசாரணைக்கு மட்டும் அனுமதிக்கிறோம். தேர்தல் கமிஷனர், ஸ்டாலின், சென்னை மாநகராட்சிகமிஷனர் ஆகியோர் 8 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடலாம். தேர்தல் முடிவும் வெளியிடப்படலாம். தேர்தலில் யார்தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் பணியைத் தொடரலாம். ஆனால் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும்.
இனி இந்த மனு வழக்கமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications