உள்ளாட்சித் தேர்தல் - வாக்குச் சாவடி அலுவலர்களின் பணிகள்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகளை தேர்தல் கமிஷன்வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும்16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுநடைபெறுகிறது.
அப்போது ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் செய்ய வேண்டியபணிகள் பற்றிய விவரம் வறுமாறு:
அலுவலர்களின் பணிகள் வாக்குப் பதிவுக்கு முன், வாக்குப் பதிவு நடந்துகொண்டிருக்கும் போது மற்றும் வாக்குப்பதிவுக்குப் பின் என்று 3 கட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளே அலுவலர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து, வாக்குப் பதிவு நடக்கும்இடம், வாக்குப் பெட்டி இருக்கும் இடம் மற்றும் முகவர்கள் ஆகியவற்றைப் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மழைவந்தால் வாக்குப் பதிவு பாதிக்காத வகையில் வாக்குச்சாவடி உள்ளதா என்று பார்க்க வேண்டும். வாக்குப்பதிவுக்குத் தேவையான மை, வாக்குச் சீட்டுக்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
வாக்குப் பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பே வாக்குச் சாவடிக்கு வந்து வேட்பாளர் பட்டியல் ஒட்டுதல், 100 வாக்குச்சீட்டுக் கட்டுகளின் பின்புறம் கையெழுத்திடுதல் ஆகியவற்றைச் செய்து முடிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் முவர்களைச் சரிபார்த்துவிட்டு காலை 7.30 மணிக்கு வாக்குப் பதிவை ஆரம்பிக்கவேண்டும்.மாலை 5.30 மணிக்கு வாக்குச் சாவடியின் நுழைவு வாயிலை மூடிவிட்டு, உள்ளேயிருக்கும் வாக்காளர்களுக்குமட்டும் வாக்குச் சீட்டுகளைக் கொடுக்க வேண்டும்.
பிறகு எஞ்சிய வாக்குச் சீட்டுக் கணக்கு, மை, உட்பட அனைத்துப் பொருட்களையும், வாக்குப் பெட்டியை சேகரிக்கவரும் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications