பெர்ணான்டசை திரும்ப அழைத்ததில் தவறில்லை - கருணாநிதி
சென்னை:
மத்திய அமைச்சரவையில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீண்டும் சேர்க்கப்பட்டததில் தவறில்லை என்று முன்னாள்முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறினார்.
மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை 6வது முறையாக இன்று விரிவுசெய்யப்பட்டது. இதில் தெஹல்கா இணையதளம் வெளியிட்ட ஆயுத பேர ஊழலில் முன்னாள் ராணுவ அமைச்சர்ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு தொடர்புள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
தற்போது மீண்டும் அவர் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, மீண்டும் அவருக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பலத்த எதிர்ப்புத்தெரிவித்துவருகின்றன.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
ஜார்ஜ் பெர்ணான்டஸ் தெஹல்கா விவகாரத்தில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டவுடன், அதற்கு தார்மீகப்பொறுப்பேற்று பதவி விலகினார்.
அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத பட்சத்தில், தெஹல்கா விவகாரத்தில் அவருக்குச் சம்பந்தம்இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இப்போது மீண்டும் அவர் அமைச்சர் பதவியேற்பதில்தவறில்லை.
இதைக் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்காரர்கள் எதிர்க்கிறார்கள்.
3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றவர் முதல்வராகப் பதவியேற்கலாம் என்பதை மட்டும் இவர்கள்ஆதரித்தார்கள். ஆனால் தண்டனையே வழங்கப்படாத ஒருவர் அமைச்சர் பதவியேற்பதை மட்டும் ஏன்எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
தண்டனைபெற்ற 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அதிமுக அரசு மீண்டும் பதவி வழங்கியிருப்பதன் மூலம், தண்டனைபெற்றவர்களுக்குத்தான் பதவி வழங்க வேண்டும் என்ற விதியை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்றுதெரிகிறது.
இளங்கோவன் சொல்வதைப் போல விரைவில் சட்டசபைக்குத் தேர்தல் வருவதை திமுக விரும்பவில்லை என்றார்கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications