மார்க்சிஸ்ட் அணிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
சென்னை:
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுஅளிக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாரதி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சி அடிப்படையிலேயே நடத்தப்படுவதால், ஆட்சி மன்றக் கூட்டங்களும் கட்சிஅடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன.
இதனால் கூட்டணி மாறம்போது கட்சிகளும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன. இந்த அமைபு மாற்றம்செய்யப்பட வேண்டும்.
இதுபோன்ற அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்து, யார் உண்மையில் மக்களுக்காகப் போராடுகிறார்களோஅவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரசியலில் நேர்மையானவர்கள், குடியிருப்போர்சங்கங்களின் வேட்பாளர்கள் ஆகியோரை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ் போட்டியிடாத இடங்களில், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் என்றுமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications