வன்முறை... அவமானத்தால் கண் கலங்கிய தேர்தல் அதிகாரி
சென்னை:
சென்னை-கோபாலபுரத்திலுள்ள வாக்குச் சாவடியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அச்சாவடியின் தேர்தல்அதிகாரி அந்த வன்முறைக் கும்பல் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி கண் கலங்கினார்.
கோபாலபுரத்தில் வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்த இரண்டு வாக்குசாவடிகளில் வன்முறை கும்பல் புகுந்து,அங்கிருந்த வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டு போடத் துவங்கியது. இது குறித்து அந்த வாக்கு சாவடியில்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் என்பவர் கூறியதாவது:
வாக்குப் பதிவு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. சுமார் 11.30 மணியளவில் 15 பேர் கொண்ட கும்பல்திடீரென உள்ளே நுழைந்து வாக்களிக்க வந்திருந்த பொதுமக்களை துரத்தினர்.
வன்முறைக் கும்பல் "சீட்டை எடுத்து குத்தி பெட்டியில் போடுங்க" என்று கூறி கள்ள ஒட்டு போட்டு விட்டுஅங்கிருந்து வாகனங்களில் தப்பி ஓடி விட்டனர்.
அவர்களை "நீங்கள் யார்?" என்று கேட்டபோது, "அதை கேட்க நீ யார்?" என்று கேட்டனர். குத்திவிடுவதாகவும்அவர்கள் என்னை மிரட்டினர். என்னை அவர்கள் அவமரியாதையாகப் பேசியதால், எனக்கு மிகவும்அவமானமாகி விட்டது.
நான் அரசு உயர் அதிகாரியின் தனி செயலாளராக பணியாற்றி வருகிறேன். என் சர்வீசில் இது வரை ஒருகரும்புள்ளி கூட ஏற்பட்டது கிடையாது. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. எனக்கு மன வேதனைஅதிகமாக உள்ளது என்றார் வெங்கடேஷ்.
"என்னை அவமரியாதை செய்துவிட்டனர்" என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருந்தினார். இதைக் கூறும்போதுஅவர் கண்களும் கலங்கின.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications