மறுப்புடன் காலின் பாவலை வரவேற்கும் இந்தியா
இஸ்லாமாபாத்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை காலின்பாவல் கூறியுள்ளதை இந்தியா மறுத்துள்ளது.
இன்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுடன் பேச்சு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாவல்,
இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இரு நாடுகளும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பு கொடுத்து பேச்சுவார்த்தை மூலம் இப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.
காஷ்மீரில் நடந்து வரும் தீவிரவாதத்தை ஏற்க முடியாது. கடந்த 1ம் தேதி காஷ்மீர் சட்டசபை நடந்த தாக்குதலைமன்னிக்க முடியாது. இத் தாக்குதலைக் கண்டித்த முஷாரபுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முன்னதாக பாவலுடன பேசிய முஷாரப், தீவிரவாத்தை ஒழிக்க வேண்டுமானால் அதற்குக் காரணமான அரசியல்ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்றார். காஷ்மீர் விவகாரத்தைத் தான் அவர் மறைமுகமாக இவ்வாறு சுட்டிக்காட்டியதாக இந்தியா கருதுகிறது.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் அவர் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பின் காலின் பாவல் இந்தியா புறப்பட்டார்.
இதற்கிடையே, காஷ்மீர் தான் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்று காலின் பாவல் கூறியுள்ளகருத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ்கூறுகையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே முக்கிய பிரச்சனையே தீவிரவாதம் தான், காஷ்மீர் அல்ல என்றார்.
தனது கருத்தை காலின் பாவலிடமும் இந்தியா தெளிவாக எடுத்துரைக்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications