ஆலந்தூரில் கள்ள ஓட்டு: தட்டிக் கேட்ட அதிகாரியை மிரட்டினார் பெண் அமைச்சர்
சென்னை:
ஆலந்தூரில் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையில் 60 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேன்களில்சென்று பகிரங்கமாகக் கள்ள ஓட்டுப் போட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதைத் தட்டிக் கேட்ட அதிகாரியைவேலையை வீட்டு நீக்கிவிடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அடுத்த ஆலந்தூர் நகராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை)நடக்கிறது.
ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வளர்மதி தலைமையில் 60பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர், 5க்கும் மேற்பட்ட வேன்களில் சென்று அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் புகுந்து சராமாரியாகக் கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர்.
அப்போது அவர்களைத் தட்டிக் கேட்ட தேர்தல் அதிகாரி ஞானதாஸ் என்பவரை, வேலையை விட்டுநீக்கிவிடுவோம் என்று வளர்மதி மிரட்டினார்.
மேலும் பல வாக்குச் சாவடிகளை அவர்கள் கைப்பற்றி வாக்குச் சீட்டுக்கள் அனைத்திலும் கள்ள ஓட்டுப்போட்டுவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் போலீசார் இருந்துவிட்டனர்.
வளர்மதி தலைமையில் இந்தக் கும்பல் அந்தப் பகுதி முழுவதும் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பகிரங்கமாகக் கள்ள ஓட்டுப் போடுவதை போலீசார் கண்டுகொள்ளாமல் நிற்பதைப் பார்த்த பொதுமக்கள்கலவரமடைந்து, ஓட்டுப் போடாமல் வீட்டுக்குத் திரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது.
மேலும் வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண் வாக்காளர்களிடம் அவர்கள் தவறாக நடக்க முயன்றதாகவும்அங்கிருந்த வாக்காளர்கள் கூறுகிறார்கள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications