ஓசூரில் போலீஸ் துப்பாக்கி சூடு
ஓசூர்:
இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலின் போது தருமபுரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போலீசார் துப்பாக்கி சூடுநடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஓசூரில் இன்று காலை வாக்குப் பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே திமுக-அதிமுகவுக்கு இடையே கடும் மோதல்ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அங்கு போலீசார் விரைந்து வந்து அமைதியைஏற்படுத்தினர்.
மேலும் பதட்டம் தொடரலாம் என்று கருதிய போலீதார் வாக்கு சாவடிக்கு அருகே இருந்த கடைகளை மூடுமாறுகேட்டுக் கொண்டனர். ஆனால் கடையை மூட முடியாது என்று கடையின் உரிமையாளர்கள் முரண்டு பிடித்தனர்.
இதனால் போலீசாருக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடைக்காரர்கள்கூட்டமாக சேர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில் ராஜம்மாள் என்ற பெண்ணும்காயமடைந்தனர். மக்கள் நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் காயமடைந்தார். இவர்கள் 2 பேரும் ஓசூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பள்ளி மாணவன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் அபூர்வா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை நேரில்ஆராய்ந்தார்.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா கூறுகையில், ஓசூரில் தற்போது பதட்டம் எதுவும் இல்லை.ஓசூரில் அமைதி நிலவுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications