தேர்தல் விஷயத்தில் ஆளுனர் தலையிட முடியாது: தேர்தல் கமிஷன்
சென்னை:
தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளில் ஆளுனர் தலையிட முடியாது என்று மாநில தலைமை தேர்தல் கமிஷனர்பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு குறித்து பாண்டியன் சென்னையில்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆளுனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுனர் கேட்டுக்கொண்டால் நடவடிக்கை எடுப்பீர்களா என்று பி.எஸ்.பாண்டியனை செய்தியாளர்கள் கேட்ட போது, தேர்தல்ஆணையம் சுந்திரமான அமைப்பு. அதன் செயல்பாடுகளில் ஆளுனர் தலையிட முடியாது என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தொலைபேசி, பேக்ஸ் மூலம் தேர்தல் அசம்பாவிதம் குறித்து என்னிடம் புகார்கூறினர்.
பெரிய புகார்களுக்கெல்லாம் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாக்கு பதிவின் போது நடந்த அசம்பாவிதம் குறித்த இறுதி அறிக்கையை சம்பவ இடத்திற்கு தேர்தல் ஆணையம்சார்பில் அனுப்பப்பட்டுள்ளவர்கள் கொடுப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையின் பேரில் நடவடிக்கைஎடுக்கப்படும்.
தேர்தல் அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்என்று நம்புகிறேன்.
பிரச்சனை ஏற்பட்ட இடங்களில் இயலாமையால் எதையும் செய்ய முடியாமல் தேர்தல் பணியாளர்கள் நின்றுகொண்டிருந்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் நியமித்த தேர்தல் பணியாளர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்ய வேண்டும். அவ்வாறுசெய்ய தவறியவர்கள் மீது கிரிமினல் சட்டப்படியோ அல்லது நீதிமன்றம் மூலமாகவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் கட்ட வாக்கு பதிவு நடந்த அனைத்து இட.ங்களிலும் மறு வாக்கு பதிவு நடத்துவது என்பது முடியாது. அதைசம்பந்தபட்ட வேட்பாளர்களும், மக்களும் விரும்பமாட்டார்கள்.
குற்றம் நடந்தால் மனுதாரர், எதிர் மனுதாரர் இருவரையும் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுபோலீசார் பொறுப்பு.
இரண்டாவது கட்ட வாக்கு பதிவில் வன்முறை எதுவும் நடக்கக்கூடாது. அமைதியை விரும்புபவர்களும, சட்டம்,ஒழுங்கு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்றுநம்புகிறோம் என்று கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications