"இந்தியா, அமெரிக்காவில் மனித உரிமைகள் மீறல்"
வாஷிங்டன்:
இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் சட்டங்களை வகுத்துள்ளன என்று வாஷிங்டனில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு (ஹியூமன்ரைட்ஸ் வாட்ச்) என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும், அமெரிக்காவும் முன்னிலையில் உள்ளன. இதில்அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிராக போர் ஆரம்பித்துவிட்டது. இந்தியாவும் தீவிரவாதிகக்கு எதிராக ராணுவநடவடிக்கைகளில் இறங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த 2 நாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் மனித உரிமையைப்பாதிக்கும் விதத்தில் சட்டங்களை இயற்றி உள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிரிவின் துணை இயக்குநர் ஜோ சாண்டர்ஸ்கூறுகையில்,
இந்திய தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான அனுகுமுறைகளைக்கையாளவிருப்பதாகத் தெரிகிறது. இதைப் பற்றி இந்தியப் பாராளுமன்றத்தில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில்விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்தச் சட்டத்தின் படி தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அவற்றை அரசுக்குத் தராமல் மறுப்பதுதேசவிரோதச் செயலாகக் கூறப்பட்டுள்ளது. இது அப்பாவி மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் போலீசார்நடத்தும் அராஜகத்தை அதிகப்படுத்திவிடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
இதேபோல அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலை அடுத்து அங்கும் போலீசாரின்அதிகாரம் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்குள்ள அகதிகள், அடைக்கலம் தேடிவரும் ஆதரவற்றோர், வெளிநாட்டவர்கள் வடுமையானநடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.
மேலும் விசாரணை என்ற பெயரில் அவர்களது அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் என்றும் நாங்கள்கவலையடைகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications