அமைதியாக நடைபெறும் மறு வாக்குப் பதிவு
சென்னை:
கடந்த 16ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இன்று மறுவாக்குப் பதிவுநடைபெறும் 306 இடங்களிலும் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 16ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 18ம் தேதிஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
16ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 306 இடங்களில் மறுவாக்குப் பதிவுஇன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு சென்னையில் 43 இடங்களிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 263இடங்களிலும் மறுவாக்குப் பதிவு தொடங்கியது.
தற்போது வரை இந்த வாக்குச்சாவடிகளில் எந்த அசம்பாவிதமும் இன்றி வாக்குபதிவு அமைதியாகநடந்துவருகிறது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
சென்னையில் திருவாண்மியூர் பகுதியில் 16ம் தேதி நடந்த வாக்குப் பதிவின்போது வன்முறைக் கும்பல் கலவரத்தில்ஈடுபட்டதால் 2 வாக்குச் சாவடிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்த 2வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவருகிறது.
வாக்களிக்க வந்த மக்கள் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகவும், எந்தவித இடையூறும் இன்றிவாக்களிக்க முடிகிறது என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ராமநாதபுரத்தில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேரில், 2 பேர்நிலைமை கலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மதுரை அர மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications