திமுக, அதிமுகவிடமே அரசியலைக் காட்டிய வாக்காளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வழக்கமாக மக்களைத் தான் அரசியல்வாதிகள் குழப்புவார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில்அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி தங்கள் அரசியலைக் காட்டிவிட்டனர் தமிழகவாக்காளர்கள்.

அதாவது, அதிமுகவைச் சேர்ந்தவரை மேயராகத் தேர்ந்தெடுத்த அதே வேளையில் கவுன்சிலர்களாக திமுகவினரைத்தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் மேயர் முறைகேடு செய்தால் கவுன்சிலர்கள் சும்மா விட மாட்டார்கள்.கவுன்சிலர்கள் முறைகேடு செய்தால் மேயர் விடமாட்டார்.

இப்படி எதிரெதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்களை பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்து தங்கள் அரசியல் மெச்சூரிட்டியைநிரூபித்துவிட்டனர் மக்கள்.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெற்றது.

தென் மாவட்டங்களில் மண்ணைக் கவ்விய அதிமுக:

முக்கியமாக அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட அனைத்துதொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் தற்போது நடந்துமுடிந்துள்ளள உள்ளாட்சித் தேர்தலில், கிராமங்கள்நிறைந்த தென் மாவட்டங்களில் அதிமுக மண்ணைக் கவ்வியுள்ளது.

அதே நேரத்தில் மதுரை போன்ற அதிமுக கோட்டைகளை திமுக வளைத்துப் போட்டுள்ளது.

மேலும் கடந்த 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியில் கூட வெற்றிபெறாத அதிமுக,இந்த முறை சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய 3 மாநகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணிக்கட்சியான தமாகா திருச்சி மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

நகர்புறங்களில் வென்ற அதிமுக:

வடமாவட்டங்களில் அதிமுக வரலாறு காணாத முத்திரையைப் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின்கோட்டைகளாகக் கருதப்பட்ட நகர்ப்புறங்களில் அதிமுக கணிசமான வெற்றியைப் பெற்று ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி மன்றங்கள் மற்றும் பேராட்சிகளில் திமுகவும், அதிமுகவும் சம அந்தஸ்தைப் பிடித்துள்ளன. அதாவது ஒருநகராட்சியின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதன் உறுப்பினர்களாகபெரும்பாலும் திமுகவினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாறியது 41 ஆண்டு வரலாறு:

இதே நிலைதான் சென்னை மாநகராட்சியிலும். திமுக சார்பில் போட்டியிட்ட ஸ்டாலின் மீண்டும் சென்னைமேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் அதிமுகவினராகவும்,தமாகாவினராகவும் இருக்கிறார்கள்.

சென்னையில் 67 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் கடந்த 41 ஆண்டுகால வரலாற்றை மாற்றியுள்ளது அதிமுக.இத்தனை இடங்களை அதிமுக சென்னையில் வென்றதே இல்லை.

ஆனால் கடந்த 1958லிருந்து திமுகதான் மேயர் பதவி வகித்து வருகிறது. அதே நிலை தற்போதும் நீடிக்கிறது.ஆனால் வார்டுகளில் 61 இடங்களை மட்டுமே பெற்று திமுக பின்தங்கியுள்ளது. இதனால் ஸ்டாலினுக்கு பெரும்சிக்கல் ஏற்படும்.

தென் மாவட்டங்களில் வென்ற திமுக:

தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பொறுத்தவரையில் திமுக கிராமப்புறங்களிலும் அதிமுகவுக்கு சமமான இடங்களைப்பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றி, அப்பகுதிகளில் திமுகவின் கனிசமான வளர்ச்சியைக்காட்டுகிறது.

மேலும் திமுகவின் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா 6 நகராட்சிகளில் வென்று3-வது பெரிய கட்சியாகத்திகழ்கிறது. திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான பாமக 1 நகராட்சியில் வென்றுள்ளது.

காங்கிரசும் தனித்துப் போட்டியிட்ட போதும் ஒரு நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோலதனித்துப் போட்டியிட்ட மதிமக 2 நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+