For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறையும் மதிமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த சட்டசபைத் தேர்தலில் தனியாக நின்று பெரும் சரிவைச் சந்தித்த பிறகும் கூட, மீண்டும் உள்ளாட்சித்தேர்தலில் தனியாக நின்று சூடு வாங்கியுள்ளது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக).

உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, மக்களிடம் மதிமுகவுக்கு உள்ள செல்வாக்குகுறைந்து கொண்டே போவது தெளிவாகத் தெரிகிறது.

சீட் பிரச்சனை காரணமாகக் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய(வெளியேற்றப்பட்ட) மதிமுக, தனியாகவே தேர்தலைச் சந்தித்தது. அதுபோலவே தற்போது உள்ளாட்சித்தேர்தலிலும் தனியாகவே களத்தில் இறங்கியது மதிமுக.

தன்னுடைய பேச்சால் மக்களை தன் வசம் இழுக்கும் தந்திரம் பெற்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.ஆனால் வைகோவின் பேச்சுக்களை யாரும் மதித்ததாகவே தெரியவில்லை என்பதைக் காட்டுகின்றன உள்ளாட்சித்தேர்தலின் முடிவுகள்.

ஒற்றை இலக்கத்தைப் பெறுவதற்கே பெரும்பான்மையான இடங்களில் மதிமுக திணறியுள்ளது. மொத்தமுள்ள 102நகராட்சிகளில் இரண்டே இரண்டு நகராட்சிகளை (குளித்தலை, பட்டுக்கோட்டை) மட்டுமே மதிமுக பிடித்துள்ளது.

நகராட்சியே இந்தக் கதி என்றால் மாநகராட்சியைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிமுக, திமுகவுக்குஅடுத்தபடியாகக் கூட மதிமுகவால் வர முடியவில்லை. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் மட்டும் ஒருவழியாக நான்காவது இடத்தை (24,491 வாக்குகள்) மதிமுக பெற்றுள்ளது.

மாநகராட்சி வார்டுகளில் கூட மதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கவில்லை. கோவை மாநகராட்சியில்மட்டும் அதிகபட்சமாக 3 வார்களைப் பெற்றுள்ளது மதிமுக. சேலம், மதுரை மற்றும் நெல்லை மாநகராட்சிளில்ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள மதிமுக, சென்னையிலும் திருச்சியிலும் தலா ஒரு வார்டை மட்டுமேபிடித்துள்ளது.

ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் மதிமுகவுக்கு இதே நிலைமைதான். சொற்ப ஓட்டுக்களைத்தான்மதிமுக பெற்றுள்ளது. ஓட்டுக்களே சொற்பமாக இருக்கும்போது, கிடைத்த வார்டுகள் மட்டும் அதிகரித்திருக்கவாபோகிறது?

மொத்தமுள்ள 6,489 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 130 மட்டுமே மதிமுகவுக்குக் கிடைத்துள்ளது.அடுத்தபடியாக தமிழகம் முழுவதிலுமுள்ள 3,346 நகராட்சி கவுன்சிலர் பதவிகளில் 97 மதிமுகவினர் மட்டுமேதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

601 டவுன் பஞ்சாயத்துத் தலைவர்களில் 13 பேர் மட்டுமே மதிமுகவைச் சேர்ந்தவர்கள். மேலும், மொத்தமுள்ள9,023 டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் 185 இடங்கள் மட்டுமே மதிமுகவுக்குக் கிடைத்துள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து யூனியன் வார்டு தேர்தல்களிலும் மதிமுக "சளைக்கவில்லை". மொத்தமுள்ள 654 மாவட்டபஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்களில் 7 பேர் மட்டுமே மதிமுக உறுப்பினர்களாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் கூட இடம் பெற்றுள்ள மதிமுக, தமிழகத்தில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. கடந்தகாலங்களில் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் மட்டுமே ஓரளவு மதிமுகவுக்கு வாக்குகள்கிடைத்தன என்றுதான் இப்போது தோன்றுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்று நன்றாகச் சூடு வாங்கிக் கொண்ட பிறகும், உள்ளாட்சித் தேர்தலில்மீண்டும் தனித்து நின்ற மதிமுகவைப் பாராட்டியே தீரவேண்டும். இருந்தாலும் இப்போது மீண்டும் சூடு வாங்கிக்கொண்ட நிலையில் மதிமுகவை என்ன சொல்லிப் "பாராட்டுவது"?

எனவே, ஏதாவது கூட்டணியில் சேர்ந்தால்தான் மதிமுக என்ற பெயராவது மக்களுக்குத் தெரியும் என்ற நிலையில்அக்கட்சி உள்ளது. கூட்டணி இல்லையேல் மதிமுகவும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X