நான் பேசினால் பன்னீர் தாங்க மாட்டார்: கருணாநிதி
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அவர் கூறியுள்ளவை அவர் உள்ளத்திலிருந்து வரும் கருத்துக்களல்ல. நான் பதிலளித்தால்அவர் தாங்கமாட்டார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நற்று (புதன்கிழமை) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறை, கள்ள ஓட்டு, சதி, எல்லாம் நடந்தபின்பும்ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் 2 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் தோற்றுவிட்டார் என்று அறிவிக்க தயாராக இருந்தார்கள்.
ஆனால் நாங்கள் சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கை காரணமாகவும், சட்டத்திற்கு புறம்பாகநடப்பவைகளை தட்டிக் கேட்கும் பொறுப்பிலிருந்தவர்கள் எச்சரித்ததாலும் ஸ்டாலின் 5ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
தவறு செய்த அதிகாரிகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காது.பதவி உயர்வுதான் தரும்.
நாங்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆளுனரிடம் புகார் கொடுத்துள்ளோம். நிலையைச்சொன்னோம். அவர் உண்மையை புரிந்து கொண்டார்.
தேர்தல் முறைகேடு குறித்து வழக்கு தொடர்வது குறித்தும், அறப்போராட்டம் நடத்துவதுகுறித்து மீண்டும் யோசித்து முடிவெடுப்போம்.
திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. முன்பு அண்ணா இருந்த போது மாநகராட்சி தேர்தலில் திமுகவும். சுதந்திராகட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
திமுக வெற்றி பெற்றது. ஆனால் சுதந்திரா கட்சிக்கு 1 இடம் கூட கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜாஜி கூறுகையில்,குழம்பில் எவ்வாறு உப்பு கலந்திருக்கிறதோ அதேபால் திமுகவெற்றியில் சுதந்திராவின் ஓட்டுக்களும் கலந்துள்ளன என்று கூறினார். ராஜாஜி அப்போதுகூறியது இப்போதைய நிலைக்கும் பொருந்தும்.
உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்துள்ளாதாக முதல்வர் கூறியுள்ளார். நான் அவருக்குமதிப்பளிப்பவன் அவரது வார்த்தைகள் அவரது உள்ளத்திலிருந்து வருபவையல்லஎன்பதை நான் நன்கு அறிவேன். நான் பதில் கூறினால் அவர் தாங்கமாட்டார்.எனவேநான் அவருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
விரைவில் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்த முடிவெடுத்துள்ளோம். கட்சியில் அமைப்பு,நிர்வாக, செயல் ரீதியாக மாற்றங்களைச் செய்ய நானும் பொதுச் செயலாளரும்ஆலோசனை செய்து வருகிறோம்.
விரைவில் உறுப்பினர் சேர்க்கையும், கட்சி அமைப்புக்-கு தேர்தலும் நடைபெறும் என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications