அமெரிக்க உளவாளிகளைக் கொல்ல ஒமர் உத்தரவு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆளும் பகுதியில் அமெரிக்க உளவாளிகள் யாரும் இருந்தால் அவர்களைக்கொன்றுவிடுமாறு முல்லா ஒமர் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடுக்க தற்போது தலிபான்கள் ஆளும் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவாக யாரும் மறைமுக வேலைகளில் இறங்கினாலோ, அல்லது அவர்களுக்குஉளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டாலோ அவர்களைப் பிடித்து விசாரித்து தூக்கிலிட வேண்டும் என்று தலிபான்தலைவர் முல்லா ஒமர் தனது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று தலிபான் உள்துறை அமைச்சக அதிகாரி முல்லா அப்துல் ரசாக் கூறுகையில், நாங்கள் எங்கள்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும் அமெரிக்காவுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும்அவர்களைத் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டு என்று முல்லா ஒமர் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் இதுவரை 100 பேரை கைது செய்து, அவர்கள் தலிபான்களின் போர் நடவடிக்கைகள் குறித்துஉளவு பார்த்தார்களா என்று விசாரித்து வருகிறோம் என்றார்.
காண்டஹார் நகரில் வசித்து வந்த மக்களில் பாதிக்குமேற்பட்டவர்கள் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப்பயந்து அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
மேலும் தலிபான் வீரர்கள் வீடுவீடாகப் புகுந்த அங்கிருக்கும் மக்களை ஆயுதங்களுடன் அமெரிக்காவுக்கு எதிரானபோரில் கலந்துகொள்ள வரவேண்டும் என்று உத்தரவிட்டு வருகின்றனர்.
மேலும், அங்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்வதுடன் அவர்களிடம் விசாரணையும்நடத்துகிறார்கள்.
வீரர்கள் அனைவரும் ராக்கெட் லான்ச்சர் மற்றும் ஏ.கே. ரகத் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications