லாரி வேன் நேருக்கு நேர் மோதல்: பலி பேர் 5

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செங்குன்றம் அருகே நேற்று (வியாழக்கிழமை) லாரியும், வேனும் நேருக்கு நேர்மோதிக் கொண்ட கோர விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் பலத்தகாயமடைந்தனர்.

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான சரஸ்வதி பூஜை வியாழக்கிழமை தமிழகம்முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வரசவாக்கம் கிராமம் பூக்கள் பூத்துக் குலுங்கும்அழகிய கிராமம். இங்கிருந்து தினந்தோறும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிக்ற்குபூக்கள் செல்வது வழக்கம். வியாழக்கிழமை சரஸ்வதி பூஜை என்பதால் பூக்களுக்குஅதிகமான டிமாண்ட் இருந்தது.

அதிக அளவில் பூக்களுடன் 25 பேரையும் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்னைநோக்கி கிளம்பியது.

பழநியிலிருந்து ஒரு லாரி வெல்லம் ஏற்றிக் கொண்டு வந்தது. இந்த லாரி ஆந்திரா,ஓங்கோலுக்கு சென்று கொண்டிருந்தது. லாரி மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.

ஜம்புலிவரம் அருகே வந்தபோது சாலையில் மரங்கள் போட்டு சாலைமறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை டிரைவர் திருப்பிய போது வேனும்,லாரியும் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் வேன் நொறுங்கி போனது. சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்துபோனார்கள். காயமடைந்த அனைவரும் உடனடியாக சென்னை ஸ்டான்லிமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 2 பேர் இறந்து போனார்கள்.

இறந்து போன 5 பேரில் 3 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. கிருஷ்ணன்(35), மணி (42), ரவி (25) ஆகிய 3 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர்கள் கும்மிடிப்பூண்டிக்கு அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்த 28 பேரில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறசென்றுவிட்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 25 பேரில் ஒருவர் உடல் நிலைகவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்களும் பலத்த காயமடைந்தள்ளதால் அவர்களுக்குதொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் குருசாமியை (வயது 26) போலீசார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+