திமுகவில் மீண்டும் அழகிரியும், ஆதரவாளர்களும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு இழுபறி றிலை ஏற்பட்டுள்ள நிலையில், திமுக கட்சிப் பணிகளிலில்இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தனது ஆதரவாளர்களுடன்மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.

மதுரை திமுகவில் கட்சியின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிமட்டும் வகித்து வந்த அழகிரியும், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனும் எதிர்எதிர் கோஷ்டிகளாகச்செயல்பட்டு வந்தனர்.

அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்துகொண்டு அழகிரி எழுச்சிப் பேரவை என்று ஆரம்பித்ததும், மதுரைக்குஸ்டாலின் வந்தபோது அவருக்கு முறையான வரவேற்பு அளிக்காமல் அவரைப் புறக்கணித்ததும் கட்சி மேலிடத்தைஎரிச்சலூட்டியது.

இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அழகிரி கட்சிப்பணிகளில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார். மேலும்அவரது ஆதரவாளரான மிசா பாண்டியன் உள்ளிட்ட ஆட்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அழகிரி திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தார்.

மதுரையில் போட்டியிட்ட அனைத்து திமுக வேட்பாளர்களும் தோற்றதற்கு அழகிரியின் உள்வேலையும் ஒருகாரணமாகச் சொல்லப்பட்டது.

பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, மதுரையில் அழகிரியும் அவரதுஆதரவாளர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து கட்சித் தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை சென்னை சென்று அழகிரி சந்தித்தார்.அதற்கு பிறகு இவர்களுக்கிடையே நிலவிவந்த இறுக்கமானசூழ்நிலை தளர்ந்தது.

இருப்பினும் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அழகிரியின் சிபாரிசு கண்டுகொள்ளப்படவில்லை.அழகிரி திமுகவுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ வேலை செய்யாமல் ஒதுங்கி இருந்தார்.

ஆனால் அவரது ஆதரவாளர்கள் பல் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். மேலூர் நகராட்சித் தலைவராகதங்கஜெயபாலன், மதுரை மாநகராட்சி உறுப்பினர்களாக குருசாமி, அப்துல்காதர், கே.பி.நாதன் ஆகியோர்வெற்றிபெற்றனர்.

இவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்னை சென்ற அழகிரி அங்கு திமுக தலைமை நிலையத்தில்கட்சித் தலைவர் கருணாநிதி, அன்பழகன் முன்னிலையில் மீண்டும் தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

தற்போது மதுரை மாநகராட்சி மேயர் பதவியை திமுக கைப்பற்றியிருந்தாலும், துணை மேயர் பதவியைக் கைப்பற்றமுடியாத சூழ்நிலையில், இவர்கள் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவுக்கு மேலும் பலம் சேர்க்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+